நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காவல்துறை கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

அரச மலேசியக் காவல்துறை  கூட்டுறவு சங்கத்திற்கு (KPDRM) கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கான கடனை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இருப்பினும்,  நிறுவனக் கடன்களுக்குத் தள்ளுபடி வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

நஷ்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் வைத்த கோரிக்கைக்கு KPDRM இன் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

இல்லையென்றால் நீங்களே கடன்களைக் கட்டுங்கள் என்று பிரதமர் அன்வார் ரசாருடின் ஹுசைனிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டார். 

காவல்துறையினரின் செயல்திறன் மற்றும் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தள்ளுபடி மட்டுமே வழங்க முடியும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset