நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாத்தாவிற்கு சமர்ப்பணம்: எஸ்பிஎம்மில் 11A வெற்றி பெற்று திவ்யா சுந்தரம் மகத்தான சாதனை

ஈப்போ, ஏப்ரல் 28:

தாத்தாவின் கனவை நினவாக்க ஈப்போ ஜெலாப்பாங்கைச் சேர்ந்த திவ்யா சுந்தரம், 2024ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் பொதுத் தேர்வில் 11 பாடங்களில் A பெற்று, மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஈப்போ ஶ்ரீ புத்ரி இடைநிலைப்பள்ளியின் மாணவியான திவ்யா, தனது தொடக்கக் கல்வியை சன் ஃபுலோமினா தமிழ்ப்பள்ளியில் பயின்றார். முன்னதாக யுபிஎஸ்ஆர் தேர்வில் 8A பெற்று சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரின் முழுமையான ஆதரவு

திவ்யாவின் பெற்றோர் சுந்தரம் புஷ்பராஜூ மற்றும் சசிகலா சிவராமன், மகளின் கல்விப் பயணத்தில் உறுதியான ஆதரவாக இருந்தனர். மேலும், ஈப்போவில் நன்கு அறியப்படும் லக்மி லாரி சேவை உரிமையாளர் புஷ்பராஜூவின் பேத்தியுமான திவ்யா, தாத்தாவை பாசமோடு நினைவுகூர்ந்தார்.

பேத்திக்காக பணம் சேர்த்த தாத்தா

திவ்யா மருத்துவத் துறையில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற கனவுடன் அவர் பிறந்த நாள் முதல் மாதந்தோறும் சேமிப்பு செய்து வந்தவர் அவரது தாத்தா புஷ்பராஜூ. இன்று அவர் இல்லாவிட்டாலும், தமது வெற்றியை குடும்பத்தினருக்கும் தாத்தாவிற்கும் திவ்யா உணர்வுப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.

தமது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும், திவ்யா தனது நன்றியை இதயப்பூர்வமாக தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset