நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்

கோலாலம்பூர்:

மலேசிய இராணுவப் படைகளின்  (ATM) உயர் பதவி நியமனங்கள் முழுமையாக தொழில்முறையைப் பின்பற்றியும் எந்தவிதமான வெளிப்புற தலையீடுகளோ அல்லது தாக்கங்களோ இல்லாமல் இருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நியமனச் செயல்முறை நிலவும் சட்ட, நிறுவன கட்டமைப்புகளுக்குள் மேற்கொள்ளப்படுவதுடன், தொழில்முறைத் தன்மை, சட்ட ஆட்சியின் (rule of law) கோட்பாடுகளையும் முழுமையாக பின்பற்றுகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ முகமது கலித் நோர்டின் கூறினார்.

“ATM தலைமையின் நியமனங்கள் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளின் படியும் மேற்கொள்ளப்படுகின்றன.

“இந்த நியமன செயல்முறை, கூட்டாட்சி அரசியலமைப்பின் 137வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டப்  பொறுப்புகளுக்கு அமைவாக, ஆயுதப் படைகள் கவுன்சில் (Majlis Angkatan Tentera) மூலம் நேர்மையுடன் செயல்படுத்தப்படுகிறது,” என அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ATM-க்கு தலைமைக் மாற்றத்திற்கான திட்டங்கள் இருந்தாலும், அவற்றின் நடைமுறை அரசியலமைப்பு மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் அரசின் அனுமதிக்கு உட்பட்டது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

“ATM தலைமை பதவி மாற்றங்கள், தற்போதைய நிர்வாகக் கொள்கைகள், ஆட்சி காரணிகள், தேசிய பாதுகாப்பு தேவைகள் குறித்த மதிப்பீடுகள் ஆகியவை ATM தலைமை பதவி மாற்றங்களில் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

மேலும், அனைத்து பரிசீலனைகளும் முடிவுகளும் பாதுகாப்பு அமைச்சர், ஆயுதப் படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர், நிலப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, வான்ப்படைத் தளபதி, ஆயுதப் படைகள் தலைமையகத்தின் தலைமைச் செயலாளர், பணியாளர் சேவைகள் உதவி தலைமைச் செயலாளர், பொது சேவைத் துறையின் துணை தலைமை இயக்குநர் (மேம்பாடு), அரசர்களின் பிரதிநிதி உள்ளிட்டோர் அடங்கிய ஆயுதப் படைகள் கவுன்சிலால் கூட்டாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு கூடுதலாக, துணை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தலைமை அரசு வழக்கறிஞரும் ஆயுதப் படைகள் கவுன்சிலின் உறுப்பினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

“இந்த அமைப்பு, ஒவ்வொரு நியமனமும் வெளிப்படையாகவும், நியாயமாகவும், பொறுப்புடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் சமநிலை மற்றும் கண்காணிப்பு (check and balance) முறையாக செயல்படுகிறது.

“ஆயுதப் படைகள் கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்த பின்னர், நியமன பரிந்துரைகள் மாமன்னர் அவர்களின் அரசாணைக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆகவே, ATM உயர் தலைமையின் நியமனங்கள் நிர்ணயிக்கப்பட்ட சட்ட, நிறுவன கட்டமைப்புகளுக்குள், தொழில்முறைத் தன்மை, சட்ட ஆட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகிறது,” என அவர் தெரிவித்தார்.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset