நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு

முகா:

கம்போங் ஸ்கோயன் பகுதியில் நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போன 83 வயதான முதியவர் இபெக் இபுட், இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

நேற்று இரவு முதல் தேடுதல், மீட்பு நடவடிக்கை (SAR) நடைபெற்று வந்த நிலையில், காலை 8.01 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கிராம மக்கள் அவரைக் கண்டுபிடித்தனர்.

சம்பவம் குறித்து இரவு 8.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சரவாக் தீயணைப்பு துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்தது.

அவர் மாலை 6.40 மணியளவில் நதிக்கோ அல்லது தோட்டத்திற்கோ சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. பின்னர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியும் பலன் இல்லாமல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

மேலும் அவர் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்றும்,  அருகிலுள்ள காடுகளில் வழிதவறியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.

முகா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், மலேசிய அரச காவல்துறை, கிராம மக்களுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பின்னர், முதியவர் குடும்பத்தினரால் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset