செய்திகள் மலேசியா
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
பென்டாங்:
பக்கவாதம், உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதும், பஹாங் மாநிலத்தில் காவடி தயாரிக்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து காத்து வருகிறார் 67 வயதான கைவினைஞர் ஏ. ஞானாபிரகாசம்.
காராக் ஸ்ரீ சுப்பிரமணியம் கோவிலில் உள்ள சிறிய அறையில், பல காவடிகளுக்கு அவர் இறுதி அலங்காரத்தைச் செய்துவருகிறார். இந்த மாதம் மீண்டும் பக்கவாதம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவரது காவடி அலங்காரத்தை கைவிடாமல் தொடர்ந்து செய்து வருவது பெரும் பாராட்டுக்குரிய செயலாகும்.
பஹாங்கில் இன்னும் செயல்பட்டு வரும் சில காவடி தயாரிப்பாளர்களில் ஒருவராக, வாடிக்கையாளர்களுக்கான பணிகளை குறித்து நேரத்திற்குள் முடிக்கிறார்.
மூன்று தலைமுறைகளுக்கு மேலாக காவடி தயாரித்து வரும் அவர், இதனை வருமானம் மட்டுமல்ல, ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாகக் கருதுகிறார்.
தைப்பூசத்தின் போது பக்தர்கள் சுமக்கும் காவடிகள் பல வாரங்கள் கொண்டு தயாரிக்கப்படும் கைத்தொழிலாகும் ஆகும். ஆனால் இளம் தலைமுறை ஆர்வம் காட்டாததால் இந்தக் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
முன்னர் தைப்பூசத்திற்கு முன் 25 காவடிகள் வரை செய்திருந்த அவர், இவ்வருடம் நான்கு மட்டுமே தயாரிக்க முடிந்தது. குழந்தைகள் சுமக்கும் சிறிய மரக் காவடிகள் RM80 முதல் RM120 வரை விலையுடையவை; பெரிய தனிப்பயன் வடிவமைப்புகள் RM1,200 வரை ஆகும்.
வாடிக்கையாளர்களின் இடுப்பு, தோள்பட்டை அளவுகளின் அடிப்படையில் வடிவமைத்து, மாலை நேரம் முதல் இரவு வரை உழைத்து ஒரு வாரத்திற்குள் பணிகளை முடிப்பதாக அவர் கூறினார்.
இவ்வளவு கடின உழைப்புடைய காவடிகளை தயாரிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அடுத்த தலைமுறையினரிடையே காவடிகள் தயாரிப்பு பெரும் அறைகூவலாக அமையக்கூடும் என்கிறார் ஞானாபிரகாசம்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 10:53 am
பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி
January 29, 2026, 10:51 am
முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா
January 29, 2026, 10:50 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்தனர்
January 29, 2026, 10:15 am
