நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KLIA-வில் லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது ஏழு குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) வெளிநாட்டு பயணிகளை சோதனையிலிருந்து விடுவித்து, RM5100 லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று அமர்வு நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

47 வயதான முஹம்மத் ரஹ்மத் மாட் யூசாஃப், அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிபதி ரோஸ்லி அஹமது முன் வாசித்தபோது, குற்றத்தை மறுத்துள்ளார்.

2024 ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 16 வரை புத்ராஜயாவில் உள்ள ஒரு வங்கியில், ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ஒரு நபரின் கணக்கிலிருந்து RM5,100 பெற்றதாகவும், அதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அல்லது காவல் துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2009 இன் பிரிவு 25(1) கீழ் பதிவு செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் RM100,000 அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு விசாரணைக்கான அடுத்த தேதி பிப்ரவரி 27 என நிர்ணயிக்கப்பட்டது.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset