நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலம், நீலாய் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நடைபெற்ற மலேசிய அரசுப் போலீஸ் (PDRM) ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

‘ஓப்ஸ் பின்டாஸ் மேகா’ எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, மதியம் சுமார் 1 மணியளவில் நீலாய் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு பிரிவால் மேற்கொள்ளப்பட்டது என்று மாநில காவல் துறை தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மது கூறினார்.

அந்த இடத்தில் கட்டுமானத் துறையில் பணியாற்றிய 63 வெளிநாட்டவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் பலர் செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வேலை அனுமதிப் பத்திரங்களையும் சமர்ப்பிக்கத் தவறினர்.

இதில், 21 சீனர்கள், 2 வங்கதேசர்கள் 7 மியான்மார்காரர்கள் என மொத்தம் 30 பேர், செல்லுபடியாகும் ஆவணங்கள், வேலை அனுமதி இல்லாததால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக நீலாய் மாவட்ட காவல் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் இந்த நடவடிக்கை ஆரம்பக் கட்ட விசாரனையில் மனிதக் கடத்தல் குறியீடுகள், தேசிய வழிகாட்டி (NGHTI) 2.0 அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் சோதனையின் போது மனிதக் கடத்தல் சம்பவங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட முதலாளிகள், பொறுப்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், வழக்கு குடியேற்றச் சட்டம் பிரிவு 6(1)(c) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset