செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு ஜனவரி 30 முதல் ஏழு சாலைகள் மூடப்படும்: மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி
கோம்பாக் -
பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு ஜனவரி 30ஆம் தேதி முதல் ஏழு முக்கிய சாலைகள் மூடப்படுகிறது.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் கூறினார்.
தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்துமலையில் இந்த தைப்பூச விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இதை முன்னிட்டு பத்துமலை பகுதியைச் சுற்றியுள்ள ஏழு முக்கிய சாலைகள் படிப்படியாக மூடப்படும்.
மூடப்படும் சாலைகளில் கம்போங் மெலாயு பத்துமலை சமிஞ்சை விளக்கு, பத்துமலை பைபாஸ் பிரதான நுழைவாயிலுக்குள் செல்லும் சறுக்கு சாலை, கோவிலை நோக்கி செல்லும் ஜாலான் பெருசஹான் ஆகியவை அடங்கும்.
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை இந்த சாலைகள் மூடப்படும். மொத்தம் 1520 போலிஸ் அதிகாரிகள் இங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் வெளிப்படையான அனுமதி வழங்கப்படாவிட்டால், பத்துமலை ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
பணியில் இருக்கும் போலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை எப்போதும் கடைப்பிடிக்கவும், முடிந்த போதெல்லாம் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பத்துமலையில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 2:12 pm
KLIA-வில் லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது ஏழு குற்றச்சாட்டுகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 11:51 am
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
January 29, 2026, 10:53 am
பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி
January 29, 2026, 10:51 am
முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா
January 29, 2026, 10:50 am
