நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வில் முழு தேர்ச்சி பெறாத மாணவர்கள் திவேட் கல்வித் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

எஸ்பிஎம் தேர்வில் முழு தேர்ச்சி பெறாத மாணவர்கள் திவேட் கல்வித் திட்டங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இத்தேர்வில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து பாடங்களில் ஏ பெற்று சாதித்துள்ளனர். அனைத்து பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

அதே வேளையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளராமல் அடுத்து என்ன பயில்வது என்று சிந்துத்து செயல்பட வேண்டும்.

தற்போது நிலவரப்படி திவேட் எனப்படும் தொழிற் திறன் கல்விக்கும் மிகப் பெரிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

ஆகையால் மாணவர்கள் இத்துறைகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

முடிந்தால் பலரின் ஆலோசணையுடன் இதனை மேற்கொள்ள வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset