நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத பணம்: முன்னாள் இராணுவ வீரரின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

கோலா திரங்கானு:

முன்னாள் இராணுவ வீரரான (PTD) டான்ஶ்ரீ முஹம்மது ஹபிசுத்தீன் ஜந்தன், அவரது மனைவி சல்வானி அனுவார்@கமருதீன், கடந்த ஆண்டு RM5,000 அளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த வருமானத்தை பெற்றுக்கொண்டதாக, இங்கு உள்ள செஷன் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

27 வயதான சல்வானி, நீதிபதி மொஹ்த் அஸ்ஹர் ஒத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாம் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

“நான் குற்றமற்றவள். விசாரணை நடத்த வேண்டும்,” என அவர் கூறினார்.

சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த RM5,000 தொகையை, தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2025 ஜனவரி 16ஆம் தேதி, பெசுட் அருகேயுள்ள கெர்தே பகுதியில் அமைந்துள்ள ஒரு வங்கி கிளையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset