நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இளைஞர் தனது உயர் கல்வி படிப்பை தொடர அமைச்சர் ஸ்டீவன் சிம் நிதியுதவி

புக்கிட் மெர்தாஜாம்:

இந்திய இளைஞர் தனது உயர் கல்வி படிப்பை முடிக்க தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் நிதியுதவி வழங்கினார்.

25 வயதான எஸ். செல்வெஸ்டோன் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை பயின்று வருகிறார்.

இவர் ஜாவி, நிபோங் டெபாலைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த ஆண்டு இவரின் பெற்றோர் மரணமடைந்து விட்டனர்.

இதனால் உயர் கல்வி பயில்வதில் சிக்கலை எதிர்கொண்ட அம்மாணவரை அமைச்சர் சந்தித்தார்.

மேலும் அவரின்  படிப்பு தடைபடாமல் இருக்க 20,000 ரிங்கிட் நிதியுதவியையும் அவர் வழங்கினார்.

கடந்த ஆண்டு செல்வெஸ்டோனின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார்.

அதே வேளையில்  கல்லீரல் பிரச்சினைகளால் அவர் தனது தந்தையையும் இழந்தார்.

அந்த இளைஞனின் வாழ்க்கை எப்போதும் கஷ்டங்களால் நிறைந்ததாக இருந்தது.

ஆனால் பெற்றோரை இழந்ததால் இப்போது செல்வெஸ்டோன் தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமைதியான செல்வ்ஸ்டோன், தனது 15 வயதிலிருந்தே குடும்பத்தின் அன்றாட செலவுகளை ஈடுகட்ட ஒரு பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

உண்மையில், இப்போது வரை அவர் இன்னும் ஒரு இ-ஹெய்லிங் டெலிவரி டிரைவராக வேலை செய்கிறார்.

வார இறுதி நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் வகுப்பிற்குப் பிறகு தனது மோட்டார் சைக்கிளில் பல மணி நேரங்களைச் செலவிடுகிறார்.

இதன் அடிப்படையில் தான் அவருக்கு என்னால் முடிந்த உதவிகளை வழங்கினேன் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset