நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு; புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலுடன் நடைபெறும்: ஷேக் பரிதுத்தீன்

கோலாலம்பூர்:

பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலுடன் நடைபெறும்.

பெர்மிம் பேரவையின் தலைவர் ஷேக் பரிதுத்தீன் இதனை கூறினார்.

நாட்டில் இந்திய முஸ்லிம் இயக்கங்களை ஒருங்கிணைந்தது தான் பெர்மிம் பேரவை.

இப்பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பெட்டாலிங்ஜெயாவில் உள்ள மாஹ்சா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கிட்டத்தட்ட 180 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

50க்கும் மேற்ப்பட்ட இணை இயக்கங்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.

குறிப்பாக இவ்வாண்டு புதிய நிர்வாகத்திற்கான தேர்தலுடன் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

அனைத்து பதவிகளுக்கும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் தகுதியானவர்கள் புதியவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பாகும்.

என் தலைமையிலான நடப்பு நிர்வாகம் உரிய சேவைகளை செய்துள்ளது.

இச்சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்ப்பதாக ஷேக் பரிதுத்தீன் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset