செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூசத் திருவிழா; 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரள்வர்கள்: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
பத்துமலை திருத்தலத்தில் இவ்வாண்டுக்தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஸ்ரீ மகா மாரியம்மன தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
பத்துமலையில் கடந்த 1891ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று முதல் இன்று வரை பத்துமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டு தைப்பூச விழா வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கவுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெள்ளி ரதம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும்.
மறுநாள் ஜனவரி 31ஆம் தேதி மாலை வெள்ளி ரதம் பத்துமலையை வந்தடையும்.
மாலை 5.30 மணிக்கு சேவற்கொடி ஏற்றப்பட்டு தைப்பூச விழா அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
பிப்ரவரி 1ஆம் தேதி காலை 7 மணி முதல் சிறப்பு பூஜைகளுடன் தைப்பூச விழா தொடங்கும்.
அன்றைய தினம் அதிகமான பக்தர்கள் பத்துமலைக்கு வந்து நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.
அதோடு அரசாங்க பிரமுகர்களுடன் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் பல நிகழ்வுகள் பத்துமலையில் நடைபெறும்.
ஜனவரி 2ஆம் தேதி வெள்ளி ரதம் மீண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை நோக்கி புறப்படும் என்று அவர் கூறினார்.
தைப்பூச விழா பிப்ரவரி 1ஆம் தேதி என்றாலும் பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனை செலுத்த தொடங்கி விட்டனர்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.
குறிப்பாக அதிகமான போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளின் ஈடுப்படவுள்ளனர்.
இவ்வாண்டு பத்துமலைக்கு வருபவர்களும் நேர்த்தி கடனை செலுத்துபவர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் வாருங்கள்.
இது இந்த தைப்பூச விழாவை மேலும் சிறப்பூட்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 25, 2026, 1:35 pm
பிரிக்பீல்ட்ஸில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 12:52 pm
போலிஸ் வேடம் போட்டு 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் கைது
January 25, 2026, 11:24 am
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 9:41 am
கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து
January 25, 2026, 9:40 am
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி
January 25, 2026, 9:39 am
தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
January 24, 2026, 3:54 pm
