நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைந்து விவேகானந்தா ஆசிரமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும்: டான்ஸ்ரீ அம்பிகைபாகன்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைந்து
விவேகானந்தா ஆசிரமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும்.

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே. அம்பிகைபாகன் கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

ஆசிரமத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளின் ஒத்துழைப்புடன் இவ்விழா நடைபெற்றது.

குறிப்பாக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இவ்விழாவில் கலந்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

அதே வேளையில் கோலாலம்பூரில் மொத்தம் 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

அடுத்தாண்டு இந்த அனைத்து பள்ளிகளையும் ஒன்றிணைத்து இந்த பொங்கல் விழா நடத்தப்படும்.

இந்திய சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை விழாவாக இந்த பொங்கல் கொண்டாடப்படும் என்று டான்ஸ்ரீ அம்பிகைபாகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset