நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்தவொரு முடிவு எடுக்கும் உரிமையும் மஇகாவுக்கு உண்டு: ஜாஹித்

கோலாலம்பூர்:

அரசியலில் எந்தவொரு முடிவும் எடுக்கும் உரிமை மஇகாவுக்கு உண்டு.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

மஇகா உட்பட கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

குறிப்பாக பிபிபி கட்சியின் மறுபிரவேசம் தேசிய முன்னணி கூட்டணியை மேலும் ஸ்திரப்படுத்தியுள்ளது.

தேசிய முன்னணியில் உள்ள ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும், குறிப்பாக முக்கியக் கட்சிகள், ஒருவருக்கொருவர் மதிக்கிறோம்.

மஇகா, மசீச, அம்னோவுடன் இணைந்து முன்னாள் கூட்டணிக் கட்சியின் நாட்களில் இருந்தே ஒரு முக்கியக் கட்சியாக இருந்து வருகிறது.

மேலும் தேசிய முன்னணிக்குள் உள்ள இந்த முக்கியக் கட்சி தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset