நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் அமலாக்கம்: தேசிய பதிவுத் துறை அறிவிப்பு

கோலாலம்பூர்:

மலேசியக் குடியுரிமை வெளிநாட்டவர்களுக்கு எளிதில் வழங்கப்படுவதில்லை என்றும், நாட்டில் மக்களின் நலனை பாதுகாக்க கடுமையான பல அடுக்குகளைக் கொண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் தேசிய பதிவு துறை (JPN) தெரிவித்தள்ளது.

ஒவ்வொரு குடியுரிமை விண்ணப்பமும் கூட்டாட்சி அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி மற்றும் 1964 குடியுரிமை விதிமுறைகளின் கீழ் விரிவாக ஆய்வு செய்யப்படுவதாக தேசிய பதிவு துறை கூறியது.

பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் எழுப்பிய நிரந்தர குடியிருப்பு (PR), குடியுரிமை தொடர்பான கவலைகளை அடுத்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டது.

‘MyPR’ அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களில், குடியேற்றத் துறையிடமிருந்து பெறப்படும் செல்லுபடியாகும் நுழைவு அனுமதி முக்கிய அடிப்படையாகும்.

தேசிய பதிவுத் துறையும் குடியேற்றத் துறையும் இணைந்து சரிபார்ப்புகள் மேற்கொண்டு, அனுமதி தகுதியான நபருக்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்கின்றன.

2025 டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2,61,156 ‘MyPR’ வைத்திருப்பவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் உயரிய உரிமை என்றும், தேசிய பாதுகாப்பு தற்போதைய குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சகமும் தேசிய பதிவு துறையும் வலியுறுத்தின.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset