செய்திகள் மலேசியா
நானே எம்ஐபிபி கட்சியின் தலைவன்; ஆர்ஓஎஸ் கடிதம் வழங்கிவிட்டது: புனிதன்
ஈப்போ:
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) தலைவர் யார் என்ற கேள்விக்கே இனி இடம் இல்லை.
அக் கட்சிக்கு நானே தலைவன், நானே தளபதி என்று பி. புனிதன் கூறினார்.
அக் கட்சியின் யார் தலைவன் என்று சமீப காலமாக எழுந்து வந்த பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி ஆர்ஓஎஸ்ஸில் இருந்து வந்த பதிலில் அக் கட்சிக்கு நானே தலைவர் என்ற பதிலை வழங்கியுள்ளது.
ஈப்போவில் உள்ள அருள் மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் பேரா எம்ஐபி்பி கட்சி மகளிர் தலைவி கீதா ராஜூ ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
நாங்கள் வழக்கம்போல் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறோம், மாநில முழுவதிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் தங்களது சேவையை தங்கு தடையின்றி தொடர்ந்து செய்து வருகின்றனர்..
கட்சி தலைமைத்துவ போராட்டத்தில் ஒரு தரப்பினர் இறங்கியுள்ளது.
ஆர்ஓஎஸ் முடிவினை தனது அறிவித்துவிட்டதைத் தொடர்ந்து கட்சி பொறுப்பாளர்கள் தங்கள் சேவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாநில நிலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாநில மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அதன் மகளிர் தலைவி கீதா ராஜூ மேலும் சமுகப் பணியை மேற்கொள்ள பல திட்டங்களை வகுத்துள்ளதாக கூறினார்.
இந்த பொங்கல் நிகழ்வில் எம்ஐபி்பியின் தேசிய மகளிர் தலைவி லீலாவதி ஜீவரத்தனம் உட்பட்ட மாநில பொறுப்பகாளர்கள் ., தொகுதி பொறுப்பாளர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 1:01 pm
அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15% சொக்சோ பங்களிப்பை செலுத்த கிரேப் நிறுவனம் ஒப்புதல்: டத்தோஸ்ரீ ரமணன்
January 26, 2026, 11:18 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்: பிஎன் ரெட்டி
January 26, 2026, 11:02 am
சட்டவிரோத பணம்: முன்னாள் இராணுவ வீரரின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்
January 26, 2026, 9:02 am
எந்தவொரு முடிவு எடுக்கும் உரிமையும் மஇகாவுக்கு உண்டு: ஜாஹித்
January 25, 2026, 10:05 pm
இந்திய இளைஞர் தனது உயர் கல்வி படிப்பை தொடர அமைச்சர் ஸ்டீவன் சிம் நிதியுதவி
January 25, 2026, 10:05 pm
பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு; புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலுடன் நடைபெறும்: ஷேக் பரிதுத்தீன்
January 25, 2026, 3:54 pm
பத்துமலை தைப்பூசத் திருவிழா; 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரள்வர்கள்: டத்தோ சிவக்குமார்
January 25, 2026, 1:35 pm
