நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்: பிஎன் ரெட்டி

கோலாலம்பூர்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்து இரு நாடுகளின் அரசுகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்.

மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி இதனை கூறினார்.

இந்தியாவின் 77 குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு தலைநகரில் உள்ள இந்தியத் தூதரக இல்லத்தில் இக்குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பேசிய அவர், கடல் கடந்து அதிகமான இந்தியர்கள் மலேசியாவில் வசிக்கின்றனர்.

அவர்களுடன் இணைந்து குடியரசு தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பாக நாட்டுப்பற்றையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் இதுபோன்ற விழாக்களில் மக்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வகையில் இன்றைய விழாவில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

அதே வேளையில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் பல துறைகளில் விரிந்து உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மலேசியாவிக்கு வரவுள்ளார்.

பிரதமரின் வருகை குறித்து இரு நாடுகளின் அரசாங்கங்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்.

இருந்தாலும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையில் போது அவர் இங்குள்ள மக்களை சந்திப்பார்.

அந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் selamatdatangmodig.com என்ற அகப்பக்கத்தில் பதிவு செய்யலாம் தூதர் பிஎன் ரெட்டி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset