நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15% சொக்சோ பங்களிப்பை செலுத்த கிரேப் நிறுவனம் ஒப்புதல்: டத்தோஸ்ரீ ரமணன்

பெட்டாலிங்ஜெயா:

அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15% சொக்சோ பங்களிப்பை செலுத்த
கிரேப் நிறுவனம் ஒப்புதல் தந்துள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

பெட்டாலிங்ஜெயாவில் அமைந்துள்ள கிரேப் ஓட்டுநர்கள் வளாகத்திற்கு இன்று வருகை புரிந்தேன்.

இந்த வளாகத்தின் அறிமுகம் மலேசியா கிக் பொருளாதாரத்திற்கான அர்த்தமுள்ள அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

இதே போன்று நாடு முழுவதும் 9 வளாகங்களை கிரேப் கொண்டுள்ளது.

இந்த வளாகம் நிச்சயம் கிரேப் ஓட்டுநர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

அதே வேளையில் ஓட்டுநர்களின் நலனில் கிரேப் நிறுவனம் அதிக அக்கறையை செலுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் தற்போது முழு நேர ஓட்டுநர்களுக்கு கிரேப் 30 சதவீதம் சொக்சோ பங்களிப்பை செலுத்துகிறது.
ஆனால் இனி அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமமாக 15 சதவீதம் சொக்சோ பங்களிப்பை செலுத்த கிரேப் முன்வந்துள்ளது.

இதன் வாயிலாக முழு நேர, பகுதி நேர ஓட்டுநர்களும் பயன் பெருவார்கள்.

அதே வேளையில் எஞ்சிய 85 சதவீதம் குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகிறது.

ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

இதை தவிர்த்து கிரேப் நிறுவனம் மனிதவள அமைச்சுடன் இணைந்து செயல்படுவதால் கிட்டத்தட்ட 5,000 ஓட்டுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

பிடிபிகே வாயிலாக இப்பயிற்சிகள் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset