நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது 

கோலாலம்பூர்: 

நடிகர் சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோ திரைப்படம் எதிர்வரும் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. 

ரெட்ரோ படத்தை DMY CREATIONS நிறுவனம் மலேசியாவில் வாங்கி வெளியீடு செய்கிறது. 

நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. 

நடிகர் சூர்யா சிவக்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர்கள் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜொஜு ஜார்ஜ், ஜார்ஜ் மர்யம், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். 

கடந்த வாரம் வெளியான ரெட்ரோ படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset