
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அம்னோ - ஜசெக அரசாங்கத்தை நிராகரிப்பார்கள்: ஹம்சா
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அம்னோ - ஜசெக அரசாங்கத்தை நிராகரிப்பார்கள்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் ஆயிர் கூனிங் வாக்காளர்கள் தேசியக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜசெகவுடனான அம்னோ கூட்டணியை ஏற்காத அம்னோ விசுவாசிகளிடமிருந்து தேசியக் கூட்டணி ஆதரவைப் பெறும் திறனைக் கொண்டுள்ளது.
ஏனெனில் அவர்கள் அம்னோ தேசியக் கூட்டணியுடன் இணைவதைக் காண அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.
அம்னோவின் அசல் ஆதரவாளர்கள் அம்னோ, ஜசெக இணைப்புடன் உடன்படவில்லை என்று எங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த மாநிலம் தேசியக் கூட்டணி, அம்னோ இடையேயான கூட்டணியாக இருந்தால், இது இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் ஒரு வலுவான கூட்டணியாக இருக்கும்.
பலருக்கு இதுபோன்ற எண்ணங்கள் இருந்தால், அவர்கள் தங்கள் தலைவர்களுக்கு அம்னோ, ஜசெக கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சமிக்ஞையை அனுப்புவதற்காக மட்டுமே எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆயிர் கூனிங்கில் தேசியக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய டத்தோஶ்ரீ ஹம்சா இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2025, 9:31 pm
மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் முதல் நூலைடத்தோ புத்ரி சிவம் பெற்று கொண்டார்
May 4, 2025, 9:19 pm
கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் அதிகரிப்பு: சைபுடின் நசுதியோன்
May 4, 2025, 9:16 pm
ரிஞ்சானி மலையிலிருந்து விழுந்த மலேசிய மலையேற்ற வீரர் மரணம்
May 4, 2025, 9:01 pm
பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின
May 4, 2025, 12:44 pm
நாட்டில் இருந்த இந்திய கட்சிகள் என்னவாகின?; இந்திய சமுதாயத்தின் குரலாக எம்ஐபிபி வி...
May 4, 2025, 12:41 pm