
செய்திகள் மலேசியா
நாட்டில் இருந்த இந்திய கட்சிகள் என்னவாகின?; இந்திய சமுதாயத்தின் குரலாக எம்ஐபிபி விளங்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
ஷாஆலம்:
நாட்டில் இருந்த இந்திய கட்சிகள் எல்லாம் என்னவாகின என்று தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கேள்வி எழுப்பினார்.
தேசியக் கூட்டணி உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) ஏற்பாட்டில் இந்தியர் ஒற்றுமை விழா இன்று நடைபெறுகிறது.
எனக்கு தெரிந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி என அனைத்து மக்களின் புத்தாண்டை ஒற்றுமையாக கொண்டாடுவது இது தான் முதல் முறையாகும்.
இவ்வேளையில் இவ்விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு எனது பாராட்டுகள்.
மேலும் மலாய்க்காரராக இருந்தாலும் நான் அனைத்து மக்களின் தலைவராகும். அனைத்து இன மக்களும் எனக்கு முக்கியம் தான்.
இந்த மக்கள் அனைவருக்காகவும் நானும் தேசியக் கூட்டணியும் தொடர்ந்து போராடும்.
அதே வேளையில் நாட்டில் இந்திய சமுதாயத்திற்காக நிறைய இந்திய கட்சிகள் இருந்தன.
ஆனால் அக்கட்சிகள் இப்போது என்னவாகின என்று எனக்கு தெரியவில்லை.
அக்கட்சிகள் இருக்கின்றனவா அல்லது அமைதியாக உள்ளனவா என்று எனக்கு தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் குரலாக மலேசிய இந்திய மக்கள் கட்சி இருக்கும்.
அக்கட்சிக்கு துணையாக இருக்கும் தேசியக் கூட்டணி இருக்கும்.
ஷாஆலமில் நடைபெற்ற இந்தியர் ஒற்றுமை விழாவிற்கு தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 10:09 am
மலாய் ஆட்சியாளர்களால் மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்: ஹம்சா
May 4, 2025, 9:31 pm
மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் முதல் நூலைடத்தோ புத்ரி சிவம் பெற்று கொண்டார்
May 4, 2025, 9:19 pm
கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் அதிகரிப்பு: சைபுடின் நசுதியோன்
May 4, 2025, 9:16 pm
ரிஞ்சானி மலையிலிருந்து விழுந்த மலேசிய மலையேற்ற வீரர் மரணம்
May 4, 2025, 9:01 pm