
செய்திகள் மலேசியா
மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் முதல் நூலைடத்தோ புத்ரி சிவம் பெற்று கொண்டார்
கோலாலம்பூர்:
மலேசிய மண்ணின் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்கும் போராடிய மலாயா கணபதி தூக்கிலிடப்பட்டு இன்றோடு 76 ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில் மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
அவர் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் அவரோடு போராட்டக் களத்தில் நின்ற பி.வீரசேனனும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்கள் போராடிய தெல்லாம் மண்ணின் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்காகவும் தான்.
நாம் மறந்த வரலாற்றையும் அதிகார வர்க்கம் மறுத்த வரலாற்றையும் 76 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மலாயா கணபதியை நினைவு கூறும் வகையில் வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா இன்று பிரிக்பீல்ட்ஸ் கண் பார்வையற்றோர் மண்டபத்தில் நிறைந்த மக்கள் நடுவே மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்) நூல் வெளியீடு அப்பெரும் போராட்டவாதிகள்,நம் இனத்தின் வரலாற்று நாயகர்களை நினைவுக்கூற ஓர் அரிய வாய்ப்பு இன்று மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறலாம்.
பிரபல புரட்சி எழுத்தாளர் சிவாலெனின் எழுதிய மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் முதல் நூலை புத்ரி சிவம் கணிசமான நிதியை கொடுத்து பெற்று கொண்டார்.
டான்ஸ்ரீ குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம், தென்றல் ஆசிரியர் வித்யாசாகர், கவிஞர் மணிக்குமார், கஸ்தூரி பட்டு, முனைவர் டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2025, 9:19 pm
கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் அதிகரிப்பு: சைபுடின் நசுதியோன்
May 4, 2025, 9:16 pm
ரிஞ்சானி மலையிலிருந்து விழுந்த மலேசிய மலையேற்ற வீரர் மரணம்
May 4, 2025, 9:01 pm