
செய்திகள் மலேசியா
வெற்று வாக்குறுதிகளால் இந்திய சமுதாயத்தை ஏமாற்றக் கூடாது என்பது தான் ரீசெட் 2027 திட்டத்தின் முதன்மை இலக்காகும்: புனிதன்
ஷாஆலம்:
வெற்று வாக்குறுதிகளை கொடுத்து இந்திய சமுதாயத்தை ஏமாற்றக் கூடாது என்பது தான் ரீசெட் 2027 திட்டத்தின் முதன்மை இலக்காகும்.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் பரமசிவம் இதனை கூறினார்.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் இந்தியர் ஒற்றுமை விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக ரீசெட் 2027 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அடுத்த 16ஆவது பொதுத் தேர்தலை தேசியக் கூட்டணி எதிர்கொள்வதற்கு இத் திட்டம் மிகவும் முக்கியமாகும்.
இத் திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக இந்திய சமுதாயத்தை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள், தேவைகள் என அனைத்தும் அடையாளம் காணப்படவுள்ளது.
இதனை கொண்டு இந்திய சமுதாயத்திற்கு என நீண்ட கால இலக்குகள் உருவாக்கப்படவுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டே தேசியக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
மற்ற கட்சிகள், கூட்டணிகள் போல் தேர்தல் காலங்களில் வெற்று வாக்குறுதிகளை கொடுத்து இந்திய சமுதாயத்தை ஏமாற்றக் கூடாது என்பது ரீசெட் 2027 திட்டத்தின் முதன்மை இலக்காகும்.
ஆகவே இந்த திட்டத்திற்கு இந்திய மக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
குறிப்பாக மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு இந்திய சமுதாயம் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று புனிதன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2025, 9:31 pm
மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் முதல் நூலைடத்தோ புத்ரி சிவம் பெற்று கொண்டார்
May 4, 2025, 9:19 pm
கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் அதிகரிப்பு: சைபுடின் நசுதியோன்
May 4, 2025, 9:16 pm
ரிஞ்சானி மலையிலிருந்து விழுந்த மலேசிய மலையேற்ற வீரர் மரணம்
May 4, 2025, 9:01 pm