நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக்கழகம் இவ்வாண்டில் 3.0 சதவீத இலாப ஈவை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது

ஈப்போ: 

பேராக் மாநில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம் தங்களது உறுப்பினர்களுக்கு இவ்வாண்டு 3.0 சதவீத இலாப ஈவு வழங்கவுள்ளதாக இக் கழகத்தின் தலைவர் சி. விஜயன் இங்கு நடைபெற்ற 61 ம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அறிவிப்பு செய்தார்.

கடந்தாண்டில் உறுப்பினர்களுக்கு 1.9 சதவீத இலாப ஈவு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டில் கூட்டுறவு கழகத்தின் வருமானம் அதிகரித்ததால் உறுப்பினர்களுக்கும் இலாப ஈவு அதிகமாக வழங்க முடிந்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த காலங்களில் இக் கூட்டுறவு கழகத்தின் சொத்துடைமை வெறும் சுமார் 2 மில்லியன் ரிங்கிட்டாகும். ஆனால், தற்போதைய நிலவரப்படி இக்கழகத்தின் சொத்துடைமை சுமார் 9 மில்லியன் மதிப்பை கொண்டுள்ளது.

இதற்கு இக் கழகத்தின் உறுப்பினர்கள் வாரிய உறுப்பினர்கள் மீது வைத்த நம்பிக்கையும், உழைப்பும் என்றால் மிகையாகாது. குறிப்பாக, வாரியக்குழுவினரின்  கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் என்று அவர் பாராட்டினார்.

கடந்த 1964 ம் ஆண்டில் உருவான இந்தக்கூட்டுறவுக் கழகம் 61 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தை மிகவும் சிறப்பாக நிறைவு செய்தது.

இம்முறை சுமார் 500 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதற்கான பதிலையும் வாரியக்குழுவினர் வழங்கினர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு  வாரிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்டு தேர்தல் முனைவர் சேகர் நாராயணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இத் தேர்தலில் கழக வாரிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் எஸ்.விஜயன், வி.கலையரசு, ஜே.நளினி, எஸ்.தினகரன் ஆகியோர் வெற்றிப்பெற்றனர்.

நிறைவுவிழாவில், இக்கூட்டுறவு கழகத்தில் வாரிய உறுப்பினர்களாக செயல்பட்டு தற்போது பணிநிறைவை மேற்கொண்ட பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் அமைப்பாளர் மு.அர்ஜுணன், மேனாள் புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் வள்ளியப்பன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset