நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் அதிகரிப்பு: சைபுடின் நசுதியோன்

செயகோத்தாபாரு -

கடந்த  2022 முதல் கிளந்தானில் போதைப்பொருள் துஷ்பிரயோகம், கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ  சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

இன்று கிளந்தானுக்கு மேற்கொண்ட பணி விஜயத்தின் போது நடத்தப்பட்ட ஆய்வின் போது,

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மாநிலத்தில் மிகவும் கடுமையான பாதுகாப்பு பிரச்சினைகளில் ஒன்றாகும் விளங்குகிறது.

கைப்பற்றப்பட்ட பெரும்பாலான மருந்துகள் குதிரை மாத்திரைகள்,  ஊக்க மருந்துகள் போன்ற செயற்கை வகையைச் சேர்ந்தவை என்று தரவு காட்டுகிறது.

அதே வேளையில் சிறிய அளவில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் அடிமையாதல், விநியோகம், கடத்தல் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

மேலும் இது கைதுகள் மற்றும் தண்டனையில் முடிவடையும் வழக்குகளின் எண்ணிக்கையிலிருந்து காணப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset