நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிஞ்சானி மலையிலிருந்து விழுந்த மலேசிய மலையேற்ற வீரர் மரணம்

லொம்போக்:

இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் உள்ள ரிஞ்சானி மலையில் ஏறும் போது தவறி விழுந்ததாகக் கூறப்படும் மலேசியர் மரணமடைந்தார்.

இதனை இந்தோனேசிய தேடல், மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தியாக  இந்தோனேசிய தேசிய பூங்கா நிலையம் முகநூல் வாயிலாக தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் 80 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து மீட்புக் குழுவினரால் 57 வயதான பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது.

மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை டோரியன் மலையேற்றத்தின் நுழைவாயிலுக்குக் கொண்டு வந்தது.

பின்னர் அடக்கம் செய்வதற்காக மாதரமில் உள்ள போலிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset