
செய்திகள் மலேசியா
கோயில் ஹராம் எனும் வார்த்தைக்கு தடை விதிக்கக் கோரி கடிதம் கொடுத்தும் பிரதமர் கண்டுக் கொள்ளாதது வேதனைக்குரியது: புனிதன்
ஷாஆலம்:
கோயில் ஹராம் எனும் வார்த்தைக்கு தடை விதிக்கக் கோரி கடிதம் கொடுத்தும் பிரதமர் கண்டுக் கொள்ளாதது வேதனைக்குரியதாகும்.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் பரமசிவம் இதனை கூறினார்.
தேசிய கூட்டணியின் உறுப்புக் கட்சியாக மலேசிய இந்திய மக்கள் கட்சி விளங்கி வருகிறது.
தேசியக் கூட்டணியில் மலாய்க்காரர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது என கூறுவார்கள்.
இது உண்மை என்றாலும் நமது சமயத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளையும் மலேசிய இந்திய மக்கள் கட்சி ஏற்றுக் கொள்ளாது.
தொடர்ந்து குரல் கொடுக்கும். குறிப்பாக தேசியக் கூட்டணி எங்களுக்கு துணயாக இருக்குமே தவிர எதிர்க்காது.
அதன் அடிப்படையில் நாட்டில் தற்போது கோயில் ஹராம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக அரசு துறைகள், நிறுவனங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி இந்துக்களின் மனதை புன்படுத்துகின்றன.
இந்த வார்த்தைக்கு தடை விதிக்கக் கோரி கடிதம் கொடுத்தும் பிரதமர் கண்டுக் கொள்ளாதது வேதனையான விஷயமாகும்.
ஆகவே இந்த வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துவதை அரசாங்கம் தடை விதிக்க வேண்டும்.
இதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஷாஆலமில் நடைபெற்ற இந்தியர் ஒற்றுமை விழாவில் பேசிய புனிதன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2025, 9:31 pm
மலாயா கணபதியின் வாழ்வும் போராட்டமும் முதல் நூலைடத்தோ புத்ரி சிவம் பெற்று கொண்டார்
May 4, 2025, 9:19 pm
கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் அதிகரிப்பு: சைபுடின் நசுதியோன்
May 4, 2025, 9:16 pm
ரிஞ்சானி மலையிலிருந்து விழுந்த மலேசிய மலையேற்ற வீரர் மரணம்
May 4, 2025, 9:01 pm