நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கல்வி புரட்சியை தொடங்கியது காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்

காஜாங்:

நூற்றுக்கும்  மேற்பட்ட மாணவர்களுடன் காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்  கல்வி புரட்சியை தொடங்கியது.

இந்திய சமுதாயத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை சாரும் .

பேராசிரியர் டான்ஶ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா சிந்தனையில் உருவான ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது நாடு தழுவிய அளவில் கல்வி மையங்களை அமைத்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அந்த வகையில் கோவிட் 19 நோய் தொற்று காலத்தில் தடைபட்டு போன காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இப்போது மீண்டும் சிறப்பாக இயங்கி வருகிறது.

உமா தேவி கோவிந்தன், கனகராஜா நடராஜா, மாயா ஆகியோர் காஜாங் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை  வழிநடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆறாம் ஆண்டு, படிவம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வி கற்று வருகின்றனர்.

காஜாங், செமினி பாங்கி, ரிஞ்சிங், வெஸ்ட் கன்ட்றி சுற்று வட்டாரத்தில் உள்ள இந்திய மாணவர்கள் இந்த கல்வி நிலையத்தில் பயில வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்று உமாதேவி கோவிந்தன் தெரிவித்தார்.

இதனிடையே காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு வருகை தந்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உரையாற்றினார்.

காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காலடி எடுத்து வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

இந்த கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் அனைவரையும் அவர் பாராட்டி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் 019-3923177 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset