நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ, ஜசெக ஒத்துழைப்பில் எங்களுக்கு பொறாமை இல்லை; பாஸ் கட்சியிடம் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன: தக்கியூடின்

ஷா ஆலம்:

அம்னோ, ஜசெக ஒத்துழைப்பில் பொறாமை இல்லை. பாஸ் கட்சியிடம் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

பாஸ் கட்சியின் தலைமை செயலாளர் தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.

அம்னோ- ஜசெக கூட்டுறவு உறவைப் பார்த்து பொறாமைப்படுவதாகவும் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது.

அதே வேளையில் நம்பிக்கை கூட்டணியில் ஜசெகவுடன் இருந்தபோது இருந்ததைவிட பாஸ் இப்போது அதிக இடங்களை வென்றுள்ளது.

முன்பு, நாங்கள் ஜசெகவுடன் இருந்தோம். எங்களுக்கு நிறைய வாக்கு ஆதரவு கிடைத்தது.

ஆனால் நாங்கள் வெளியேறி தேசியக் கூட்டணியில் சேர்ந்தபோது, ​​பாஸ் கட்சி இன்னும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆக பாஸ் கட்சிக்கு யாரை பார்த்தும் பொறாமை இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset