நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கத் துறை அதிகரிகளுக்குச் சீருடையில் பொருத்தப்படும் 600 கேமராக்கள் ஜூன் மாதம் வழங்கப்படும்: சைஃபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர்: 

உள்துறை அமைச்சகம் சுங்கத் துறை அதிகரிகளுக்குச் சீருடையில் பொருத்தப்படும் 600 கேமராக்களை ஜூன் மாதம் வழங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

சுங்கத் துறை அதிகாரிகளின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலோங்க செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். 

முன்னதாக, சுங்கத் துறையின் வெளிப்படைத்தன்மை குறித்துப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார். 

அதனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். 

இதனை உடனடியாகச் செயல்படுத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதை சைஃபுடின் சுட்டிக் காட்டினார்,

உள்துறை அமைச்சகத்தின் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். 

600 உடல் கேமராக்களை விரைவில் வழங்க ஏதுவாக கொள்முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset