
செய்திகள் மலேசியா
மஇகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் உயர்க் கல்வி லட்சியப் பயணம்; நாடு முழுவதும் நடைபெறும்: அர்விந்த்
கோலாலம்பூர்:
மஇகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் உயர்க் கல்வி லட்சியப் பயணம் எனும் வழிகாட்டி பட்டறை நாடு முழுவதும் நடைபெறும்.
மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை கூறினார்.
கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்கள் நேற்று தங்களின் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொண்டனர்.
இத்தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். அதே வேளையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளராமல் அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
இப்படி எஸ்பிஎம் மாணவர்களை இலக்காக கொண்டு இந்த உயர்க் கல்வி லட்சிய பயணம் எனும் திட்டத்தை மஇகா இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
எஸ்பிஎம் தேர்வுக்கு பிந்தைய கல்வி, தொழில் பாதைகள் குறித்த முக்கிய தகவல்களை வழங்குகிறது.
இந்த முயற்சி, நமது இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
அவ்வகையில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நாடு முழுவதும் இந்த வழிகாட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர் மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு மஇகா தலைமையகத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதே போன்று கெடாவில் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய மண்டபம், பினாங்கில் பட்டர்வொர்த் டிஜிட்டல் நூலகம், நெகிரி செம்பிலானில் மஇகா தலைமையகம், மலாக்காவில் காடேக் ஜெபாருன் அலுவலகம், ஜொகூரில் தம்போய் இண்டா மஇகா தலைமையகம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
பேரா மாநிலத்தில் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் ஶ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும்.
ஆகவே மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெறுமாறு அர்விந்த் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm
துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவில்லை: ஜாஹித்
April 25, 2025, 4:19 pm