நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றிப் பெறுவதில் சிக்கல் இல்லை: ILHAM CENTRE கணிப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப்பெறுவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்காது.

இருப்பினும், 18 ஆயிரம் வாக்குகள் தேசிய முன்னணி வசம் வருவதில் சற்று சிக்கல் ஏற்படலாம் என்று ஆலோசனை வழங்குநர் அமைப்பான ILHAM CENTRE தெரிவித்தது. 

இந்த இடைத்தேர்தலானது தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி அரசியல் ஒத்துழைப்பை பரிசோதனை செய்யும் களமாக பார்க்கப்படுகிறது 

தேசிய முன்னணி வெற்றிப்பெற்றாலும் வாக்காளர்களின் ஆதரவு இலக்கை அடைய முடியாது என்றால் அது தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்று ILHAM CENTERஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் ஆயிர் கூனிங் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 2,213 பெரும்பாண்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. அப்போது அங்கு ஐந்து முனைப்போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset