
செய்திகள் மலேசியா
தாப்பா – ஆயிர் கூனிங் இடைத்தேர்தல்: டத்தோஶ்ரீ சரவணனின் ஒருமனதான உழைப்புக்கு வாக்காளர் பெருமக்கள் மதிப்பளிப்பார்களா?
தாப்பா,
தாப்பா நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள இந்நேரத்தில், மஇகா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன், தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் பணியாற்றல் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இல்லாது, இதற்கு முன்னரே ஒரு மாத காலமாக இந்தத் தொகுதியில் பணியாற்றி வந்தவர் டத்தோஶ்ரீ சரவணன.
குறிப்பாக மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, தேர்தல் ஒருங்கிணைப்பை தன்னிச்சையாக மேம்படுத்திய அவரது உண்மையான சேவைக்கு தேசிய முன்னணி வேட்பாளருக்கு வாக்களித்து மக்கள் மதிப்பளிப்பார்களா? என்பதே இந்நேரத்தில் எழும் முக்கியமான கேள்வியாகிறது.
இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகின்றது
• தேசிய முன்னணியின் வேட்பாளராக முகம்மது யுஸ்ரி பக்கிர்,
• பெரிக்காத்தான் நேஷனலின் சார்பில் அப்துல் முஹைய்மின் மலிக்,
• பிஎஸ்எம் சார்பில் பவானி கன்னியப்பன் என மூவர் கடும் போட்டியில் உள்ளனர்.
*வாக்காளர் பங்கு முக்கியம்*
இத்தொகுதியில் மலாய் வாக்காளர்கள் 55% ஆகவும், சீன வாக்காளர்கள் 22%, இந்திய வாக்காளர்கள் 14% என விகிதம் அமைந்துள்ளது. இந்த 14% வாக்குகளும் முடிவெடுக்கும் சக்தியாக இருப்பதைக் கணிக்க முடியிறது.
இந்திய வாக்காளர்களை நேரடியாக அணுகும் பணியில், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையிலான குழு மட்டுமே தொடர்ச்சியாகச் செயலாற்றி வருகின்றது.
எதிர்பார்க்கப்பட்டபடி, ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பிடித்துள்ள மற்ற இந்திய அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் அவரகளது முன்னிலையில் இத்தொகுதியில் இன்னும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*வெளியிருந்து வந்த பேச்சாளர்கள் – உண்டான குழப்பம்*
அத்துடன், ஆயிர் கூனிங் தொகுதியின் அடிப்படை பண்பாடு, மக்கள் விருப்பம் குறித்து தெரியாத சில வெளி மாநில இந்திய தலைவர்கள் இத்தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது, இந்திய வாக்காளர்களிடையே குழப்பத்தையும் வெறுப்பையும் உருவாக்கியிருக்கிறது.
*சேவை வழியில் வெற்றி தேடும் அரசியல்வாதி*
தம்முடைய நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றம் என்பதால், டத்தோஶ்ரீ சரவணனுக்கு இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கையான நிலையில்தான் உள்ளது. அவரது தொடர்ந்த சேவைகள், மக்களோடு உருவாக்கிய நெருக்கமான உறவு, தேசிய முன்னணிக்கு பெரும் ஆதரவை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு இல்லாமல் போனால், இந்த தொகுதி பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் மாற வாய்ப்பு உள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இடைத்தேர்தலின் முடிவுகள், ஒரு சாதனையாளர் ஆளும் அரசியலுக்கு மக்களால் உறுதிப்பத்திரம் வழங்கப்படுமா, அல்லது வெளிப்படையான பிரச்சார ரீதியிலேயே தீர்ப்பு வழங்கப்படுமா என்பதைத் தீர்மானிக்கும்.
டத்தோஶ்ரீ சரவணன் சேவை புரிந்து களத்தில் நின்று போராடுகிறார்.
அவரது உழைப்பிற்கு வாக்குப் பலம் கிடைக்குமா என்பது நாளைய தேதியில் தெரியும்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm
துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவில்லை: ஜாஹித்
April 25, 2025, 4:19 pm
அம்னோ- தேசியக் கூட்டணி ஒத்துழைப்பு?; பகற்கனவு காண வேண்டாம்: ஹம்சாவிறகு ஜாஹித் அறிவுறுத்து
April 25, 2025, 12:47 pm