நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக Button & Bows நிறுவனத்தின் உதவி முகாம்: பூனை உணவுகளுக்கு 25 விழுக்காடு வரை சிறப்புக் கழிவு

புத்ரா ஹைட்ஸ்:

மலேசியாவில் புகழ்பெற்ற பூனை உணவு தயாரிப்பு நிறுவனம் Button & Bows, புத்ரா ஹைட்ஸில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 26,  27 தேதிகளில் சிறப்பு உதவி முகாமை நடத்தவுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து பூனை உணவுகளுக்கும் 25% வரை சிறப்புக் கழிவு வழங்கப்படும்.

காலை மணி 10.00 முதல் மாலை 6.00 மணி வரையில் 21, Jln Eco Perindustrian 1/3C, Eco Perindustrian 5, 42300 Puncak Alam, Selangor என்ற முகவரியில் உள்ள Button & Bows கிடங்கில் பொது மக்கள் பொருட்களை வாங்கலாம்.

இரு நாட்கள் நடைபெறும் இந்த முகாமிலிருந்து கிடைக்கும் முழு வருமானமும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் Shopee, Lazada, TikTok Shop போன்ற ஆன்லைன் சந்தைகளிலும் 10% வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை மே மாதம் வரை தொடரும் என்றும், நன்கொடை இலக்கு அடையப்படும் வரை இந்த முயற்சி நீடிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இத்திட்டம் குறித்து சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் பின் ஷாரியிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது அலுவலகத்திலிருந்து ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் எங்களை பெரிதும் உருக்கியது. மலேசியராக நாம் அனைவரும் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்.

இந்த முயற்சி ஒரு நற்பணிக்காக மட்டுமல்ல, ஒன்றிணைந்த சமூகத்துக்கான வழிகாட்டியாகவும் அமையும் என Button & Bows நிறுவனத்திலிருந்து டேவ் கில் தெரிவித்தார்.

ஆகவே பூனை பிரியர்கள், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தங்கள் பூனைகளுக்கு தரமான கூடுதல் உணவுகளை வாங்கி சேமித்து வைக்கவும், ஒரு அர்த்தமுள்ள காரணத்திற்காக தங்களின் பங்களிப்பை வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தொடர்புக்கு: (Dave Gill )012 286 9187

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset