நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிச்சை எடுக்கும் இடத்திற்காக சண்டை: ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

ஷாஆலம்:

பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் நபர் ஒருவர் மற்றொரு பிச்சைக்காரரை கத்தியால் குத்திக் கொன்றார்.

இந்த சம்பவம் ஷாஆலம் செக்சன் 18 இல் உள்ள ஒரு வங்கியின் முன் நடந்ததாக  ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மதியம் 12 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலிஸ் துறைக்கு புகார் கிடைத்தது.

விசாரணையில் பாதிக்கப்பட்டவர் 40 வயதுடைய உள்ளூர்வாசி ஆவார். அவர் வங்கிப் பகுதியைச் சுற்றி பிச்சை எடுத்து வந்துள்ளார்.

சந்தேக நபர் 28 வயதுடைய உள்ளூர்வாசி ஆவார். அவரும் அந்தப் பகுதியில் பிச்சை எடுக்க வந்துள்ளார்.

இந்நிலையில் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக சண்டையிடுவது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சந்தேக நபர் கத்தியை எடுத்து பாதிக்கப்பட்டவரின் மார்பில் பல முறை குத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் மூழ்கி மயக்கமடைந்து தரையில் விழுந்தார்.

கிடைத்த தகவலின் பேரில், சம்பவம் நடந்த இடத்தில் மதியம் 12.30 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சோதனையின் முடிவுகளில் சந்தேக நபருக்கு ஒன்பது குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் எந்தவொரு போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கும் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset