நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் கோபுரம் நாளை மீண்டும் திறக்கப்படும்: தகவல், தொடர்பு அமைச்சு அறிவிப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

கோலாலம்பூர் கோபுரம் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று தகவல், தொடர்பு அமைச்சு அறிவித்தது. 

நாளை காலை 9 மணிக்குப் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படும் என்று அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

கோலாலம்பூர் கோபுரம் மீண்டும் திறக்கப்படுவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், வருகையாளர்கள் அவர்கள் சார்ந்த விவகாரங்கள் நடப்பு மடானி அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதைக் காட்டுவதாக உள்ளது 

மக்களுக்குச் சிறந்த வகையில் சேவைகளை வழங்குவதில் கோலாலம்பூர் கோபுரம் சிறந்தவற்றை வழங்குவதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. கோலாலம்பூர் கோபுரத்தை LSH SERVICE MASTER SDN BHD நிறுவனம் நிர்வகித்து வருகிறது 

முன்னதாக, மேம்பாட்டு நடவடிக்கைக்காக கோலாலம்பூர் கோபுரம் பொதுமக்களுக்காக தற்காலிகமாக  மூடப்படுவதாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அரசாங்கம் அறிவித்திருந்தது 

கோலாலம்பூர் கோபுரத்தை மேம்படுத்தும், சீரமைக்கும் நடவடிக்கைக்காக LSHSM நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset