நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்

தாப்பா:

ஆயிர் கூனிங் சட்டமன்ற  இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

14 நாள் பிரச்சார காலம் முடிந்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்கள் நாளை நிறைவேற்றுவார்கள்.

63 முகப்பிடம் உள்ளடக்கிய மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

இதில் தோ தன்டீவா சக்தி தேசியப் பள்ளியின் வாக்களிப்பு மையம் மட்டும் மாலை 4 மணிக்கு மூடப்படும்.

வாக்கு எண்ணிக்கை செயல்முறை இங்குள்ள மெர்டேகா மணடபத்தில் நடைபெறும்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, காலையில் வெயில் நிறைந்த வானிலையும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிர் கூனிங் மாநில சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமது யூஸ்ரி பக்கீர் மும்முனை போட்டியை எதிர்கொள்கிறார்.

அவரை எதிர்த்து தேசியக் கூட்டணி வேட்பாளர்கள் அப்துல் முஹைமின் மாலிக், பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவாணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset