நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் 2,600 இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள்: டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை

தாப்பா:

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் 2,600 இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இந்தியர்களில் 2,600 வெள்ளை வாக்காளர்கள்  தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள்.

மேலும்  300 பேர்  சாம்பல் நிற வாக்காளர்கள். 700 வாக்காளர்கல் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

இந்தப் பிரிவில் வாக்காளர்களின் முழு ஆதரவு தேசிய முன்னணி மாநிலத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

இதனால் அதன் பெரும்பான்மை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

தேசிய முன்னணி வெற்றி பெறும் என்று நான் 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பெரும்பான்மை என்பது பின்னர் வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.

2,600 வெள்ளை வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாக்களிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தற்போது வெளி வாக்காளர்களைத் தொடர்பு கொள்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் மஇகா உறுப்பினர்கள் ஆவார்.

இன்று கம்போங் ஆயின் கூனிங்  ஜாலான் பெசாரில் நடந்த மதிய உணவு நிகழ்ச்சியிலும் இந்திய குடியிருப்பாளர்களுடனான சந்திப்பிற்கு பின் டத்தோஶ்ரீ சரவணன் இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமது யுஸ்ரி பக்கீர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset