நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ புத்ரி இடை நிலைப்பள்ளியில் 4 இந்திய மாணவிகள் 11ஏ; சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப்பள்ளியில் இருவர் 10ஏ: ஈப்போவில் இந்திய மாணவர்கள் சாதனை 

ஈப்போ:

ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப்பள்ளி,  ஈப்போ ஸ்ரீ புத்ரி பெண்கள் இடை நிலைப்பள்ளி, சுங்கை சிப்புட் ஹாஜி அப்துல் வஹாப் இடை நிலைப்பள்ளி, சுங்கை சிப்புட் மெதடிஸ்ட் இடை நிலைப்பள்ளிகளிலும் கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக ஈப்போவில் உள்ள ஸ்ரீ புத்ரி இடை நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகள் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளியில் எஸ் பிஎம். தேர்வு எழுதிய மாணவிகளில் மீனாட்சி வேலாயுதம்,ஹார் ஷினி குமாரவேல், சுபாஷினி சுந்தர், அனுஷிகா வேல் ஆகியோர் 11 பெற்று சாதனை படைத்த மாணவிகளாவர்.

இப்பள்ளியில் மேலும் இதர மாணவிகள் சிறந்த புள்ளிகளை எடுத்துள்ளதுடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மதிப்பெண்களை எடுத்துள்ளதாக ஸ்ரீ புத்ரி இடை நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் இ. மனிராஜா கூறினார்.

இதனிடையே ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடை நிலைப்பள்ளியிலும் இந்திய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று அப்பள்ளியின் முதல்வர் அஹ்மத் ரெசாவ்டின் ஹுசைன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இப்பள்ளியில் 95 விழுக்காட்டு இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அதில் மாணவர்களின் தேர்ச்சி வகிதம் அதிகரித்து வருகிறது.

இந்த தேர்வில் பிரிதிவி ராஜ் மோகன சுந்தரம் 10ஏ, கிஷோர் ராஜ் வேலாயுதம் 10ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பகவதி முனியாண்டி 8ஏ, சூர்யகணேஷ் கணேசன் 8ஏ, ஜெஸ்டின் ஜீவனேஷ் வீரகுமார் 7ஏ, தார்வின் தேவதாஸ் 5ஏ, ராம கிஷால் ராமமூர்த்தி 5ஏ பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 88.64 விழுக்காடு உயர்வுக் கண்டுள்ளது என்றார்

அதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வழங்கி வரும் ஆதரவு காரணம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset