நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவில் ஹராம், கெல்லிங் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்க: கெராக்கான்

கோலாலம்பூர்:

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் கோவில் ஹராம், கெல்லிங் போன்ற இழிவான சொற்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டோமினிக் லாவ் இதனை வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தை சிறுமைப்படுத்துவது போல் தோன்றும் கெ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

ஒற்றுமையை வலுப்படுத்த உணர்வு, மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றை இப்போது நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இந்திய சமூகத்தினருக்கான வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடைய கோவில் ஹராம் என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்றும் கெராக்கான் வலியுறுத்துகிறது.

கோவில் ஹராம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்கள், துறைகளுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் கோரிய அறிக்கை குறித்து டோமினிக் லாவ் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset