
செய்திகள் மலேசியா
சுங்கை சிப்புட் டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் இரு இந்திய மாணவர்கள் 9ஏ பெற்று சாதனை
சுங்கை சிப்புட்:
நாடு தலுவிய நிலையில் நேற்று எஸ் பி எம் முடிவு வெளியான நிலையில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் ஹஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
இப்பள்ளியில் முதல் முறையாக எஸ் பி எம் தேர்வில் 2 மாணவர்கள் 9ஏ பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தனர்.
அவர்களில் சர்மினி நாயர் கோபி, விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரு மாணவர்கள் 9 ஏக்கள் பெற்று சாதனை படைத்தனர்.
இது குறித்து இப்பள்ளியின் துணை முதல்வர் சுந்தரராஜன் கூறுகையில்,
இப்பள்ளியில் முதல் முறையாக இரு மாணவர்கள் 9ஏக்கள் பெற்று சாதனை படைத்தனர். 2024 ஆம் ஆண்டு எஸ் பி எம் தேர்வு எழுதிய 113 மாணவர்களில் 99 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் முழு தேர்ச்சி பெற்றனர்.
2023 ஆம் ஆண்டைவிட 2024 ஆம் ஆண்டு இப்பள்ளியின் எ பி எம் தேர்சி விகிதம் ஏற்றம் கண்டு உள்ளதாக குறிப்பிட்ட அவர் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தியோடு சிறந்த தேர்ச்சி பேராத மாணவர்கள் மனம் தளராது அரசு தொழிழ்துறை கல்வி கூடங்களில் சேர்ந்து தங்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சுங்கை சிப்புட் நாடளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம் சான்றிதழை எடுத்து வழங்கி மாணவர்களை பாராட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 11:11 am
கோலாலம்பூர் கோபுரம் நாளை மீண்டும் திறக்கப்படும்: தகவல், தொடர்பு அமைச்சு அறிவிப்பு
April 25, 2025, 10:38 am
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்
April 25, 2025, 10:36 am
ஜேடிதி அணியின் சாதனைகளை பாராட்டும் வகையில் ஜொகூரில் ஏப்ரல் 28ஆம் தேதி பொது விடுமுறை: மந்திரி புசார்
April 25, 2025, 10:35 am
கோவில் ஹராம், கெல்லிங் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்க: கெராக்கான்
April 25, 2025, 10:34 am