நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சோங் ரம்புத்தான் சமயப் புர மகா மாரியம்மன் ஆலயத்தின் சித்திரைத் தேர் திருவிழா

தஞ்சோங் ரம்புத்தான்:

பேரா மாநிலத்தில் மிகவும பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றாக இங்குள்ள் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள சமயபுர மகா மாரியம்மன் ஆலயத்தின் சித்திரைத் தேர்திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவைக் காண பேரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கான பக்தர்கள் திரண்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து மறுநாள் இரத ஊர்வலம் சிறப்புடன் நடந்தேறியது.

இவ்விழாவிற்கு தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஸ்குமார் சிறப்பு வருகை புரிந்தார்.

அவர் ஆற்றிய உரையில் , தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தேர்வு செய்ய இந்தியர்கள் பெரும் பங்காற்றியதற்கு நன்றியைக் கூறிக்கொண்டார்

அதன் நன்றி கடனாக இந்த தொகுதியில் உள்ள இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து உதவிகள் வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset