நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீட்டை பேங்க் நெகாரா மலேசியா, கருவூலம் மதிப்பாய்வு செய்யும்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீட்டை பேங்க் நெகாரா மலேசியா, கருவூலம் மதிப்பாய்வு செய்யும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார், 

மே 5 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் போது இது குறித்து முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பாய்வு மலேசியாவிற்கு மட்டுமல்ல, பரந்த உலகளாவிய மறுமதிப்பீட்டின் ஒரு பகுதியாகும் என்றார்.

இது அமெரிக்கா, சீனா மற்றும் பெரும்பாலான நாடுகளை உள்ளடக்கிய ஒரு உற்பத்தி வளர்ச்சியாகும். 

தேசியச் சுங்கத் துறையின் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அன்வார் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset