
செய்திகள் மலேசியா
“தமிழ் மணம்” இலக்கிய நாடகம் - கிராமிய நடனப்போட்டி – தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய விழா!
சுங்கை சிப்புட்
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான “தமிழ் மணம்” என்ற இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி எதிர்வரும் 26 ஏப்ரல் 2025 சனிக்கிழமையன்று முதன்முறையாக நடைபெறவுள்ளது.
கோலக்கங்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 13 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்கவுள்ள இப்போட்டி, சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.
ம.இ.கா தேசிய தலைவரும் AIMST பல்கலைக்கழக வேந்தருமான தான்ஶ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இந்நிகழ்ச்சிக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளார்.
தமிழ்ப்பள்ளிகள் நமது அடையாளம்
“தமிழ்ப்பள்ளிகள், நமது பாரம்பரியத்தையும், இலக்கியத் தடங்களைத் தொடர்ந்து பாதுகாத்து வளர்த்திடும் அருமையான தளமாக செயல்படுகின்றன. இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள், தமிழ்ப்பள்ளிகளின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு மைல்கல்லாக அமைகின்றன.” என தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின் முதன்மை சிறப்பு பிரமுகராக, ம.இ.கா தேசிய உதவித் தலைவரும் பேராக் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவருமான தான்ஶ்ரீ எம். இராமசாமியும், அவரது துணைவியார் புவான் ஶ்ரீ இந்திராகாந்தியும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்
“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரவும், பாரம்பரிய கலைகளில் சிறந்து விளங்கவும் இவ்விதமான நிகழ்வுகள் அவசியமானவை. இவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.” என சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத் தலைவர் வீ. சின்னராஜு தெரிவித்தார்.
“தமிழ் மணம்” போட்டி வெற்றிகரமாக நடைபெற, தங்கள் ஆதரவை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கோலக்கங்சார் மாவட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்க அன்புடன் அழைக்கப்படுவதாகவும் சின்னராஜு கூறினார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 11:11 am
கோலாலம்பூர் கோபுரம் நாளை மீண்டும் திறக்கப்படும்: தகவல், தொடர்பு அமைச்சு அறிவிப்பு
April 25, 2025, 10:38 am
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்
April 25, 2025, 10:36 am
ஜேடிதி அணியின் சாதனைகளை பாராட்டும் வகையில் ஜொகூரில் ஏப்ரல் 28ஆம் தேதி பொது விடுமுறை: மந்திரி புசார்
April 25, 2025, 10:35 am
கோவில் ஹராம், கெல்லிங் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்க: கெராக்கான்
April 25, 2025, 10:34 am