
செய்திகள் மலேசியா
“திறன் என்பது இனி விருப்பமல்ல, அடிப்படை” – டாக்டர் கெல்வின்
பூச்சோங்:
மலேசிய இந்தியர் திறன் மேம்பாட்டு இயக்கம், MISI-யின் கீழ் நடைபெற்ற AI, 3D பிரிண்டிங் மற்றும் லேசர் வேலைப்பாடு பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பூச்சோங்-இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
“திறன் பயிற்சி இனி விருப்பமல்ல – நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அவசியம். MISI திட்டம், எந்த இன, மத, சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குகிறது,” என நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் அரசியல் செயலாளரும், கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கெல்வின்,
இதுவரையில் 8,000 இளைஞர்கள் பலனடைந்துள்ளார்கள்.
MISI 1.0 இல் வாயிலாக நாடு முழுவதும் 8,000 இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது தொழில்துறையின் தற்போதைய தேவைகளை மையமாகக் கொண்டு MISI 2.0 விரைவில் தொடங்கவுள்ளது.
இது, தனியார் துறைகளின் மூலம், பயிற்சி முடிந்தவுடன் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்படும்.
பிடித்த வேலை கிடைக்க திறன் மேம்பாடு அவசியம்
“ஒருவருக்குப் பிடிக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதையும், வேலைக்கு தேவைப்படும் திறன்களும் அவரிடம் இருக்க வேண்டும் என்பதையும் MISI கட்டமைக்கின்றது,” என டாக்டர் கெல்வின் கூறினார்.
இதனிடையே இந்த பயிற்சியை சிறப்பாக முன்னெடுத்த ஏற்பாட்டுக் குழுவினர்களுக்கும் அமைச்சர் ஸ்டீவன் சிம் சார்பாக டாக்டர் கெல்வின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
-தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 11:11 am
கோலாலம்பூர் கோபுரம் நாளை மீண்டும் திறக்கப்படும்: தகவல், தொடர்பு அமைச்சு அறிவிப்பு
April 25, 2025, 10:38 am
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்
April 25, 2025, 10:36 am
ஜேடிதி அணியின் சாதனைகளை பாராட்டும் வகையில் ஜொகூரில் ஏப்ரல் 28ஆம் தேதி பொது விடுமுறை: மந்திரி புசார்
April 25, 2025, 10:35 am
கோவில் ஹராம், கெல்லிங் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்க: கெராக்கான்
April 25, 2025, 10:34 am