செய்திகள் மலேசியா
மலேசிய தெக்குவாண்டோ சாம்பியன் போட்டியில் கூட்டரசுப் பிரதேச மாநிலம் 16 தங்கம் வென்று சாதனை
கோலாலம்பூர்:
மலேசிய தெக்குவாண்டோ சாம்பியன் போட்டியில் கூட்டரசுப் பிரதேச மாநிலம் 16 தங்கம் 8 வெள்ளி 10 வெண்கலம் வென்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டரசுப் பிரதேச மாநிலம் மலேசிய தெக்குவாண்டோ சாம்பியன் போட்டியில் வென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்தார்.
இம்மாதம் நீலாய் மாவட்டத்தில் நடந்த இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்ட வேளையில் கூட்டரசுப் பிரதேச மாநிலம் ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.
பத்து நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பத்து மாணவர்கள் கூட்டரசுப் பிரதேச மாநிலத்தை பிரதிநிதித்து வெற்றி பெற்றுள்ளனர்.
அடுத்து வரும் போட்டிகளிலும் கூட்டரசுப் பிரதேச தெக்குவாண்டோ குழு பல வெற்றிகளை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரபாகரன் கலந்து சிறப்பித்தார்.
விலாயா மாநில தெக்குவாண்டோ சங்கத்தின் தலைவர் டத்தோ ஜி.எம்.பாலகிருஷ்ணன், துணை தலைவர் செல்வமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 1:08 pm
நெகிரி செம்பிலான் நெருக்கடி மாநில அரசியலமைப்பிற்குத் திரும்ப வேண்டும்: அஸாலினா
September 23, 2026, 1:07 pm
சுங்கை ஊஜோங் உண்டாங் மாளிகையில் பாதுகாப்பை போலிஸ் பலப்படுத்தியது: ஊடகங்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன
September 23, 2026, 1:07 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு எதிரான அவதூறு அறிக்கையை அவாங் ஹஷிம் திரும்பப் பெற்றார்
September 23, 2026, 1:06 pm
குறைந்த ஊதியப் பிரச்சினையை 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கவனத்தில் கொள்ள வேண்டும்: சார்லஸ் சந்தியாகோ
September 23, 2026, 11:51 am
புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி
September 23, 2026, 11:49 am
போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
September 23, 2026, 11:48 am
சரவாக்கில் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு பதிவாகியுள்ளது
September 23, 2026, 11:46 am
அந்தோனி லோக்கின் அதிகாரப்பூர்வ சீனப் பயணம் குறித்து ஃபத்லி கேள்வி எழுப்புகிறார்
September 23, 2026, 10:24 am
