நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு

ஜோர்ஜ்டவுன்:

நேற்று ஜாலான் சுங்கை டுவாவில் உள்ள ஐஸ்க்ரீம் கடைக்கு முன் நிறுத்தப்பட்ட காருக்குள் உயிரிழந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கார்பன் மோனக்ஸைடு நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

37 வயதான அவ்வாடவரின் மரணத்திற்கான காரணத்தைப் புலாவ் பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் துறையிடமிருந்து பெறப்பட்டதாக திமூர் ராவும் மாவட்ட துணை தலைமை போலிஸ் அதிகாரி சூப்பரிண்டெண்டன்ட் லீ சுவி சேக் தெரிவித்துள்ளார். 

"பாதிக்கப்பட்டவர் இறந்து 5 நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டார்.

எந்தவொரு குற்றச் செயல்களின் அறிகுறிகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இது தற்போது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது", என்று இன்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். 

பொறியியலாளரான பாதிக்கப்பட்டவர் காரின் என்ஜினை அணைக்காமலேயே தூங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. 

நேற்று, காலை 11.47 மணியளவில், உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்த, தனது மனைவிக்குச் சொந்தமான காரின் ஓட்டுநர் இருக்கையில், முழு ஆடைகளுடன் படுத்திருந்த நிலையில், அந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset