
செய்திகள் மலேசியா
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மலேசியா உறுதிப்பாடு கொண்டுள்ளது: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
கோலாலம்பூர்:
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 45 விழுக்காடு கார்பன் காற்றைக் குறைக்க மலேசியா அதன் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உலக பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் நிலையும் நாட்டின் இலக்காக உள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறப்பு மாநாடு ஒன்றில் மலேசியா கலந்து கொண்டது. இந்த கூட்டத்திற்கு ஐநாவின் பொது செயலாளர் அந்தோனியோ குத்தெரெஸ் தலைமை தாங்கினார்.
இதன் வாயிலாக, மலேசியா 45 விழுக்காடு கார்பன் காற்றை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில் 2050ஆம் ஆண்டில் சுழியம் விழுக்காடு கார்பன் நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அன்வார் இர்பாஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிராந்திய பருவநிலை நடவடிக்கையை நிலைப்பெற செய்ய ஆசியான் நிர்வாகியாக மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது. இதனால் ஆசியான் பசுமை புத்தாக்க, மற்றும் முதலீட்டு நடவடிக்கைக்கு உகந்த இடமாக இருக்கும் என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am
பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன
July 8, 2025, 11:11 am