நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளம் பெண் கடத்தல் வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

சிரம்பான்: 

ஏப்ரல் மாத தொடக்கத்தில் 16 வயது இளம் பெண்ணை கடத்தி 2 மில்லியன் ரிங்கிட் பணம் கேட்ட சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இங்குள்ள சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 

இருப்பினும், நீதிபதி டத்தின் சுரித்தா புடின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து அவர்கள் அனைவரும் விசாரணையைக் கோரினர். 

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 16 வயது இளைஞரை கடத்தி பணம் கோரியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது. 

ஏப்ரல் 10ஆம் தேதி சிரம்பான் UPTOWN AVENUE பகுதியில் மாலை 5.45 மணிக்கு இந்த நடவடிக்கையைப் புரிந்தனர். 

1961 கடத்தல் சட்டத்தின் செக்‌ஷன் 3(1)இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாமலும் சிறை தண்டனை,  பிரம்படிகளும் விதிக்கப்படும். 

இந்த சம்பவம் குற்றவியல் அம்சத்தை கொண்டிருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட யாவருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset